Pages

மஞ்சள்

இதனால் குடல் புண் , நஞ்சுகள், பசியின்மை, வலிப்பு, வீக்கம், ஜன்னி, பாண்டு, நீரேற்றம், பீனிசம், புலால் நாற்றம், சரும வறட்சி, தலைவலி, கற்றாழை நாற்றம், கட்டிகள், மாறல் சுரம், கண்வலி, கண் சிவப்பு, இருமல், தினவு, நீர்சுருக்கு, தொண்டை சதை வளர்ச்சி இவை தீரும். இதில் பல வகைகள் உண்டு. மருத்துவகுணமும் சிறிது மாறுபடும்.

அருகம்புல் | Arugampul | Bermuda Grass | Cynodon Dactylon


 அறுகு என்றும் மூதண்டம் என்றும் அழைக்கப்படும். இதற்க்கு பல பெயர்கள் உண்டு. இதனால் பாடாணவீறு, வாதம்-பித்தம்-கபம் ஆகிய முக்குற்றம், விஷக்கடி, மருந்துகளின் வெப்பம், தலைநோய், தூக்கமின்மை, குருதியழல், கண்ணோய், சொறி, நுண்புழு, மேகம், மேகவெட்டை, வெள்ளைபோக்கு, படர்தாமரை, குறிஎரிவு, நீரடைப்பு முதலிவற்றை நீக்கி உடல் அழகை கூட்டும்.

இரத்தத்தை சுத்தி செய்து தோல்நோய்களை போக்கவல்லது.

அருகம்புல்லைக் காய வைத்து சூரணம் தயாரித்து இரண்டு சிட்டிகை சிறியவர்களுக்கும், 500 மில்லி கிராம் பெரியவர்களுக்கும் தினசரி காலை மாலை உணவுக்கு முன் தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் எந்தப்பிணியும் வராமல் பாதுகாக்கும், நரை திரை மூப்புப் பிணிகள் தள்ளிப்போகும். அருகம்புல்லை வேருடன் பிடுங்கி வந்து சுத்தம் செய்து 100 மில்லியளவு சாறு எடுத்து 100 மில்லி பாலில் கலந்து ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும், மூலக்கடுப்பும், ரத்தம் வருதலும் நிற்கும். அருகம் வேர், மிளகு, சீரகம், அதிமதுரம், சித்தரத்தை, மாதுளம் பூ சமமாகச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் காய்ச்சி கஷாயமாகத் தயாரித்து வடிகட்டி கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் சகல விஷத் தன்மைகளும் நீங்கி விடும். வெட்டை நோய் தீரும். மூலச்சூடு தணியும்.

பச்சை அருகம்புல் கிடைக்காதவர்கள் மண்,தூசு இல்லாத தூய்மையான முறையில் செய்த பொடியை உபயோகிக்கலாம்.

வீட்டிலேயே மொட்டை மாடியில் அல்லது வீட்டு தோட்டத்தில் வளர்க்கலாம்.
அருகம்புல் விதை இங்கே கிடைக்கும்.
மலச்சிக்கல்

  • அகத்தி கீரை வாரம் ஒரு நாள் சாப்பிட தீரும்.
  • முளைக் கீரை அடிக்கடி சாப்பிட மலச்சிக்கல் வராது.
  • பப்பாளிப் பழம் ஒரு 100 கிராம் அளவு தினமும் இரவு ஆகாரத்திற்கு பின் சாப்பிட தீரும்.
  • ஆயுர்வேத கடைகளில் கிடைக்கும் திரிபலா சூரணம், வைச்னாவர சூரணம்,அவிபத்தி சூரணம் போன்றவை மருத்துவரின் அறிவுரைப்படி தினமும் எடுத்து கொண்டால் நல்லது.

சர்க்கரை நோய் | நீரிழிவு| Diabetes | Blood sugar

சிறுகுறிஞ்சான் இலைப் பொடி அரை டேபிள் ஸ்பூன் இரண்டு வேலை சாப்பிட கட்டுபாட்டில் இருக்கும்.

மஞ்சளையும், ஆம்லாவையும்(காய்ந்த நெல்லிக்காய்) பொடி செய்து சம அளவு சேர்த்து அரை டேபிள் ஸ்பூன் 3,4  வேலை சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

நாவல்பழம், பாவக்காய், அவரைபிஞ்சு, நெல்லிக்காய், கோவைப்பழம் இவைகளை அடிக்கடி உணவுடன் சேர்த்துக் கொள்வது நல்லது.

சீரகம் மற்றும் வெந்தயம் இரண்டும் சம அளவு எடுத்து வறுத்து பொடி செய்து 4,5 தடவைகள் சாப்பிட மிகவும் நல்லது.

வெள்ளைப்படுதல்

இந்த நோய் பொதுவாக பெண்களுக்கே ஏற்ப்படும். ஆனால் ஆண்களுக்கும் வர வாய்ப்பு உள்ளது. கீழ்காணும் முறைகள் இரண்டு பேர்க்கும் பொருந்தும்.

  • புளியிளைச்சாறும், நல்லெண்ணையும் சமன் கூட்டிக்காய்ச்சி வடித்து, காலை மாலை அருந்த நாளான வெள்ளை,நீர்சுருக்கு தீரும்.
  • நல்ல நயம் சந்தன பொடியும் , கசகசாவும் சமமாக சேர்த்து ஒரு தேக்கரண்டி அளவாக, பாலுடன் குடிக்க வெள்ளை, வயிற்றுகடுப்பு, சிறுநீர் துர்நாற்றம் இவை நீங்கும்.
  • பொரித்த படிகாரவும், வால்மிளகும் சமன் கூட்டிய சூரணம் 5-கி வீதம் தேனுடன் தர வெள்ளை தீரும்.
  • அருகம்புல்லை வேருடன் அரைத்து சரியிடை வெண்ணையில் சேர்த்து, 10-கி அளவில் உட்கொண்டு வர உட்சூடு. தளர்ச்சி, வெள்ளை நீங்கும்.
  • நன்றாக கழுவிய சோற்றுக்கற்றாழை சதை-50-கி,வெந்தயம்-10-கி, சீரகம்-10-கி கலந்து ஊறியபின் எடுத்து 2 வேளை சாப்பிடவும். தொடர்ந்து உண்ண வெள்ளை, உட்சூடு,தாதுநட்டம் நீங்கும்.