புதிய வெப்சைட்
www.mooligaimaruthuvam.in

இதனால் மிகுநீர்மருந்துவெப்பம்உடல்மெலிவுவாதமேகம்கருமேகம்,கிருமிக் குத்தல்பெருவியாதிபவுத்திரம்மூலம்உன்மாதம்பித்தகிரிச்சரம்,குன்மம்உடலெரிவுபீலிகம்உட்சூடுகண்நோய்தூக்கமின்மைமேகவெட்டை ஆகியன தீரும்.ஓரிதழ் தாமரையின் சமூலத்தை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி(பவுடர்) செய்து பாலில் கலந்து காலை, மாலை என இருவேளையும் அருந்திவந்தால் உடல் வலுப்பெறும். நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களுக்கு உடல் தேற ஒரிதழ் தாமரையின் சமூலம் நல்ல மருந்தாகும்.
              மேகவெட்டை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ... மேற்கொண்டு படிக்கவும்
இந்தியாவில் பல இடங்களிலும் நட்டு வளர்க்கப்படும் மரமாகும். இதில் வளரும் காயை ஜாதிக்காய் என்றும் , காயின் சுற்றிலும் உள்ள தோட்டை ஜாதிபத்திரி என்று கூறுவர். இரண்டும் மருத்துவ குணம் உடையது. கபம், வாதம், வயிற்று மந்தம், வயிற்று வலி ஆகியவை தீரும். சுக்ல நஷ்டம், அக்னி மாந்தம் ஆகியவை தீரும்.இதை தேங்காய் பாலில் அரைத்து சிறிது வெள்ளமும், அரிசி மாவும் சேர்த்து அந்த தேங்காய் பாலை சிறிது வேகவைத்து சாப்பிட மூத்திரத்துடன் விந்து வெளியேறுவது குணமாகும்.
இதனால் வெள்ளை விழுவது(ஆண்களுக்கும்,பெண்களுக்கும்), வீக்கம், கழிச்சல், நீர்கோவை, வெட்டை, உடலில் தங்கி உள்ள துர்நீர், பெருவயிறு, நீரடைப்பு, பாண்டு, மலச்சிக்கல், மூத்திர சூடு, உடல்சூடு,விந்து நட்டம் ஆகியவை தீர்ந்து உடல் குளிர்ந்து, ஆண்மை சக்தி கூடும். அதிகமாக சாப்பிட கூடாது. அதிக குளிர்ச்சியை உண்டாக்கிவிடும்.
இதனால் சொட்டு மூத்திரம், சுரவெப்பம், கல்லடைப்பு, நீரடைப்பு, நீரெரிவு, வெள்ளை, முக்குற்றம், நீர்வேட்கை, முடக்குவாயு, சதையடைப்பு, உடலெரிவு,அழல்,தாது நட்டம், இருதய வீக்கம், காமாலை, மூத்திரகடுப்பு முதலியவை தீரும். உடல் வலிமை பெற்று, ஆண்மை பெருகும்.
அஸ்வகந்தா:Withania Somnifera(amukkara kizhangu | amukkara kilangu)
இது அமுக்கரா என்றும் பெயர் பெறும். இந்த மூலிகையால் கரப்பான், வீக்கம், சுரம், வாயு, பசியின்மை, பலவீனம், கிரந்தி, கண்டமாலை, இடுப்புவலி, மேகபுண், உடல்பருமன், நரம்பு பலவீனம் ஆகியன தீரும். விந்து அதிகமாக ஊறி,உடல் பலமுற்று, ஆண்மை,அழகு,ஆயுள் முதலியவை கூடும்.

அஸ்வகந்தா பௌடர் செய்முறை: (amukkara choornam)
இந்த முறை பக்கவிளைற்ற,எளிமையான முறையாகும்.
முதலில் அஸ்வகந்தாவை 250gm வாங்கி மண்,தூசு போக சுத்தம் செய்ய வேண்டும். பிறகு புட்டு அவிப்பது போன்று பாலில் அவிக்க வேண்டும்( 250ml பால் + 250ml தண்ணீர்). பிறகு எடுத்து காயவைத்து பவுடர் செய்து வைத்து கொள்ளவேண்டும். தினமும் 2 நேரம் 1 டேபிள் ஸ்பூன் எடுத்து , ஒரு கிளாஸ் பாலில் கலந்து கற்கண்டு அல்லது தேன் கலந்து சாப்பிட வேண்டும்.
இப்படி 41 நாட்கள் சாப்பிடவும்.

அஸ்வகந்தாதி லேகியம்:(சஹஸ்ரயோகம்)
அமுக்குரா கிழங்குத்தூள், உளுந்துத்தூள், திப்பிலித்தூள், எள் அரைத்தது இவைகளை சம எடை எடுத்து நெய், வெல்லம்[மொத்த சூர்ணதிற்கு சமம்] ஆகியவற்றைச் சேர்த்து இடுத்து பதமாகச் செய்து கொள்ளவும். இது அனைத்து ஆயுர்வேத கடைகளிலும் ரெடிமேடாக கிடைக்கும்.
அளவு:  இரண்டு நேரம் உணவிற்கு 1 மணி நேரம் பிறகு, 5 முதல் 10 கிராம் வரை. சாப்பிடலாம்.மேலே பால் வேண்டும் என்றால் குடிக்கலாம். 1 முதல் 6 மாதம் வரை எடுக்கலாம்.

பயன்: உடல் பலம் அதிகரிக்கும், ஆண்மை கூடும், விந்து உற்பத்தி அதிகமாகும், நரம்புகளுக்கு பலத்தை அளிக்கும், உடலின் எடையை அதிகரிக்கும், விந்து முந்துதலை தடுக்கும்.
1) ரோஜா இதழ்களை இடித்து சீயக்காயுடன் சேர்த்து தலைக்கு குளித்து வந்தால் உடல் குளிர்ச்சி பெறும்.
2) பொன்னாங்கண்ணி கீரை அடிக்கடி உபயோகிக்க உடல் உஷ்ணம் குறையும்.
3) சிறுபசலைக் கீரை  அடிக்கடி உபயோகிக்க உடல் சூடு குறையும்.
4) இவற்றுள் ஏதேனும் வாழை பழத்தை தினமும் உட்கொள்ள உடல் சூடு குறையும்: செவ்வாழைப் பழம், பச்சை பழம், பேயன் பழம்.
5) ஐஸ், சீனி போடாமல் நுங்கு மற்றும் கற்றாழை சர்பத் சாப்பிடலாம்.
6) சாதாரண தண்ணீர் குடிப்பதற்கு பதில் சீரகம், நன்னாரி போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் குடிக்கவும். உடல் சூடு தணியும்.

புதிய வெப்சைட்
www.mooligaimaruthuvam.in

பிரபலமான பதிப்புகள்